×

மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

ஊட்டி, மே 13: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொள்ளும் விழா நடக்கும் இடம் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் நேற்று ஆய்வு செய்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் வரும் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்காக, வரும் 19ம் தேதி அவர் ஊட்டி வருகிறார்.
தொடர்ந்து, 21ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை  வழங்குகிறார். இவ்விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. விழா நடக்க ஒரு வாரமே உள்ள நிலையில், பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் அரசு கலைக்கல்லூரி மைதானம் மற்றும் தாவரவியல் பூங்கா மைதானத்தில் நடந்து வருகிறது. இப்பணிகளை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், தொழில்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகிேயார் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, கலெக்டர் அம்ரித் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : Ministers ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...