×

முதல்வர் அழைத்து பேச வேண்டும்

கடலூர், மே 13: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்ட குழு கூட்டம் கடலூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்ற தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி பெற்று வரும் டாஸ்மாக், ரேஷன்கடை, துப்புரவு பணியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்ட பேரவை கூட்டத்தொடரில் இதுதொடர்பாக அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.எனவே அரசுப் பணியாளர், ஆசிரியர் சங்கங்களை முதல்வர் அழைத்துப் பேச வேண்டும். ஆசிரியர்கள், அரசு பணியாளர்களைக் கொண்ட வலிமையான கூட்டமைப்பை ஏற்படுத்தி இயக்கம் நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம். இதன் முதற்கட்டமாக அரசு பணியாளர் சங்கங்களுடன் இணைந்த 21 சங்கங்களின் போராட்ட ஆயத்த மாநாட்டை வரும் ஜூன் 19ம் தேதி திருச்சியில் நடத்த உள்ளோம், என்றார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது