நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் மீண்டும் மஞ்சள் பை அறிமுக கூட்டம்

நன்னிலம், மே 12: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான, மீண்டும் மஞ்சள் பை திட்ட அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் கலெக்டரின் அலுவல் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆசைமணி முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி பேசும்போது, பிளாஸ்டிக்கினால் ஏற்படக்கூடிய தீமைகள், பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்தும், மீண்டும் மஞ்சள் பையின் பயன்பாட்டினை கொண்டுவருவதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.இக்கூட்டத்தில் நன்னிலம், சன்னாநல்லூர், மாப்பிள்ளைகுப்பம் வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் நாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

Related Stories: