×

கபிஸ்தலம் அருகே வீட்டின் கூரையை பிரித்து நகை, பணம் கொள்ளை


பாபநாசம், மே 12: கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் சரவணன் மனைவி முத்துலட்சுமி(39), விவசாய கூலித்தொழிலாளி. கூரை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது மர்மநபர்கள் இவரது வீட்டின் கூரையை பிரித்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 கிராம் தங்கத்தோடு மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை எடுத்து சென்றனர். வேலை முடிந்து வந்த முத்துலட்சுமி வீட்டை திறந்து பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, எஸ்ஐ முருகேசன், எஸ்எஸ்ஐ அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Kapistalam ,
× RELATED கபிஸ்தலம் அருகே தவறான குறுந்தகவல்களை...