×

மாணலூரில் மக்கள் தொடர்பு முகாம்

கீழ்வேளூர், மே12: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த 105மாணலூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக்குழு துணைத் தலைவர் புருஷோத்தமதாஸ், தாசில்தார் ரமேஷகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மாலதிகாளிதாஸ் வரவேற்றார். முகாமிற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்தெய்வநாயகி தலைமைத் தாங்கி 4 பேருக்கு வீட்ட மனைப் பட்டா வழங்கியும், வருவாய் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 49 பயனாளிகளுக்கு ரூ. 2,03 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர், மண்டல துணை தாசில்தார் துர்காபாய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

Tags : Public Relations Camp ,Manalur ,
× RELATED விருத்தாசலம் அருகே மணலூர் கிராமத்தில் 30 சவரன் நகை கொள்ளை..!!