வேதாரண்யம் நகராட்சியில் மரக்கன்று நடும் விழா

வேதாரண்யம் மே12: வேதாரண்யம் நகராட்சியில் தமிழக அரசின் காப்பு காடு திட்டத்தின் கீழ் சன்னதி கடற்கரை நகராட்சியின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நகரமன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து மரக்கன்று நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா பொறியாளர் முகமதுஇப்ராஹிம் துணைத்தலைவர் மங்களநாயகி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் உமா,ராஜீ திருக்குமரன், பாத்திமா மயில்வாகனம், இமையா இளவரசி, திமுக வார்டு செயலாளர் பிரபு, திமுக இளைஞரணி சண்முகம், சுதாகர் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: