போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத் - ஆழ்வார்திருநகரி சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாசரேத், மே 12: போக்குவரத்துக்கு  லாயக்கற்ற நிலையில் உள்ள நாசரேத் - ஆழ்வார்திருநகரி சாலையை விரைவில்  சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத்  -ஆழ்வார்திருநகரி இடையே உள்ள கொமந்தாநகர் - நெடுங்களம், மணல்குண்டு,  அழகியமணவாளபுரம் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக  போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதன் வழியாக தினமும்  அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை பழுதடைந்து காணப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்கள் மற்றும்  இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும்,  பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். படுமோசமான சாலையால் விபத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து  போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள நாசரேத் -ஆழ்வார்திருநகரி இடையே  உள்ள சாலையை விரைவில் சீரமைக்க  வேண்டுமென அப்பகுதி மக்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: