இ.கம்யூனிஸ்ட் செயற்குழு கூட்டம்

விருத்தாசலம், மே 12: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விருத்தாசலம் வட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. நிர்வாகி ரவி தலைமை தாங்கினார். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்டத்தலைவர் அறிவழகி, வட்ட செயலாளர் ராவணராஜன், நகர செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தனர். ஆலடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.  கொட்டாரக்குப்பம் தொடக்கப்பள்ளி, பெரியகாப்பான் குளம் அரசு உயர்நிலைப் பள்ளிகளை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மகளிர் கட்டணமில்லா பேருந்து அனைத்து கிராமங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், பச்சமுத்து, குப்புசாமி, ராமச்சந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: