இலவச வீடு திட்டத்தில் வீடு வழங்க கோரி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் கோரிக்கை மனு

விருத்தாசலம், மே 12:   விருத்தாசலம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் தலைவர் கந்தசாமி தலைமையில் பொதுமக்கள் நேற்று விருத்தாசலம் தாசில்தார் தனபதியிடம் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, விருத்தாசலத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் எங்கள் முகாமில் 1990ம் ஆண்டு அரசு மூலம் தார் சீட் வீடுகள் பத்துக்கு பத்து அளவில் அமைத்துக் கொடுக்கப்பட்டன. அதுவும் சில ஆண்டுகளில் பழுதடைந்து விட்டன. மேலும் எங்கள் குடியிருப்புகளை நாங்கள் கடன் பெற்று கட்டியுள்ளோம். ஆனாலும் பலமான அடித்தளம் இல்லாமல் தற்காலிக வீடுகளாகவே அமைக்கப்பட்டதால் மழை காலத்தில் வீட்டின் சுவர்களிலும், தரை பகுதியிலும் மழைநீர் கசிவு ஏற்படுகின்றது.

 மேலும் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதால் வீட்டில் மழைநீர் புகுந்து வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் வீட்டில் இருப்பதற்கு அச்சமாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நலத்திட்ட உதவிகளில் இலங்கை தமிழருக்கான வீடு வழங்கும் திட்டமும் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டங்களின் மூலம் எங்கள் பகுதி மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பான குடியிருப்பு வீடுகளைக் கட்டித்தர வேண்டும். என மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் தனபதி சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மனு அளித்து விட்டுச் சென்றனர்.

Related Stories: