நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் கோயில் குளம் தூர்வாரி புனரமைக்கும் பணி

நெல்லிக்குப்பம், மே 12:   நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பூலோகநாதர் கோயில் பகுதியில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கோயில் குளம் 7 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியையும், விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தேள் குட்டை ரூ.17 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரி, முட்புதர்களை அகற்றி புனரமைக்கும் பணி நடைப் பெறுவதையொட்டி நேற்று பூமி பூஜை நடந்தது. நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி இரண்டு பணிகளுக்கான பூமிபூஜையை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, நகரமன்ற துணைத் தலைவர் கிரிஜா, பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.  நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களது பணியை தொடங்கினர். ஆர்.ஆர் பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், தி.மு.க நகர செயலாளர் மணிவண்ணன், அவைத்தலைவர் ஷேக் மொய்தீன், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், துணை அமைப்பாளர் ராஜா, சீனுவாசன், வி.சி.க நகர செயலாளர் திருமாறன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் வாசு, இளநிலை உதவியாளர் பாபு, கவுன்சிலர்கள் முத்தமிழ், சரவணன், தர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: