×

கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்து ஓட்டுனர்கள் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை

கடலூர், மே 12: அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஓசையுடன் கூடிய காற்று ஒலியுடன் உபயோகிப்பதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், கவனச் சிதறல் காரணமாக விபத்து நேரிடுகின்றது என்பதால், கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லையில் உள்ள தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் நிர்வாகிகளின் கூட்டம் கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகர் தலைமை தாங்கினார். வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜாராமன், மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி அரசு பேருந்து பணிமனை மேலாளர்கள், தனியார் பேருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 இதில் கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக டெசிபல் பொருத்திய காற்று ஒலிப்பான் பயன்படுத்தக்கூடாது. ஒரு வார காலத்திற்குள் அனைத்து பேருந்துகளிலும் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளில் குறிப்பிட்ட டெசிபல் அளவில் உள்ள ஒலிப்பான்களை மட்டும் பொருத்தப்பட்டுள்ளது என சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  அவ்வாறில்லாமல் அதிக டெசிபல் கூடிய காற்று ஒலிப்பான்களை பொருத்தப்பட்டது கண்டுபிடித்தால், அபராதமாக ரூ.10,000 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் கால அட்டவணை, கட்டண விபரம் மற்றும் தட வரைபடம் ஆகியவற்றை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் இயக்கப்படும் பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags : Cuddalore ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!