நுகர்வோர் பாதுகாப்பு ஒன்றியக்குழு கூட்டம்

பண்ருட்டி, மே 12: பண்ருட்டி அருகே அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் நுகர்வோர் பாதுகாப்பு ஒன்றிய அளவிலான குழுக்கூட்டம் நடந்தது.  நுகர்வோர் சங்க தலைவர்கள் புதுப்பேட்டை ஜெய்சங்கர், நெல்லிக்குப்பம் மெய்யழகன், அக்கடவல்லி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்லாம்பாக்கம், மந்திளையம் ஆகிய பகுதியில் உள்ள ஏரி, சுடுகாடு, வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்ய பலமுறை மனு கொடுத்தும் வராத வருவாய்த்துறையை கண்டித்து கண்டனம் தெரிவித்தல், தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுக்க வராத வருவாய்த்துறையினர் மீது வழக்குத் தொடர வேண்டும். விரைவில் வருவாய்த்துறையை கண்டித்து சாலை மறியல் செய்யப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: