முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஆத்தூரில் டிஐஜி ஆய்வு

ஆத்தூர், மே 12: சேலம் மாவட்டம் ஆத்தூரில் வரும் 18ம் தேதி திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான பொதுக்கூட்ட மைதானம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்வதற்காக, நேற்று ஆத்தூர் செல்லியம்பாளையம் பகுதியில் சேலம் மண்டல டிஐஜி பிரவீன்குமார், மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் தலைமையில் காவல் துறைகள் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பொதுக்கூட்ட மைதானத்தை ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் செழியன், நகர செயலாளர்கள் பாலசுப்ரமணியம், வேல்முருகன், நகர்மன்ற தலைவர்கள் நிர்மலா பபிதா மணிகண்டன், அலெக்சாண்டர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: