புதுச்சத்திரம் வட்டாரத்தில் 31 தொடக்கப்பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்

சேந்தமங்கலம், மே 12:புதுச்சத்திரம் வட்டார வள மையத்தின் சார்பில் புதிய மேலாண்மை குழு ஒன்றியத்தில் 2ம் கட்டமாக 31 தொடக்கப்பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளராக தனி தாசில்தார் ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், அசோகன், வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரசேகரன், சுப்பிரமணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய பள்ளி மேலாண்மை குழுவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய உறுப்பினர்கள் தலைவர், துணைத்தலைவர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர், கல்வியாளர், 15 பெற்றோர்கள் விதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கூட்ட பதிவேட்டில் புதிய உறுப்பினர்கள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: