ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம், மே 12: கொல்லிமலை வட்டார கிளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டார தலைவர் தமிழழகன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தார். செயலாளர் மணிகண்டன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் துணை செயலாளர் சிலம்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: