குற்ற சம்பவங்களை கண்காணிக்க சிவகாசியில் 8 இடங்களில் சிசிடிவி போலீசார் நடவடிக்கை

சிவகாசி, மே 12: சிவகாசி நகரில் குற்ற சம்பங்களை கண்காணிக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையிலும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் ஆலோசனையின் பேரில், நகரில் 8 முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் நேற்று பொருத்தப்பட்டது. இதன்படி நகரில் உள்ள இரட்டைப் பாலம், பிள்ளையார்கோயில் முக்கு, வெம்பக்கோட்டை முக்கு, மணிநகர் முக்கு, பில்லக்குழி, பைபாஸ் ரோடு, காரனேசன் ஜங்ஷன், ரயில்வே பீடர் ரோடு ஆகிய 8 இடங்களில் சமூக ஆர்வலர்களின் பங்களிப்போடு, இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டது. சிசிடிவி கேமராவின் கண்ட்ரோல் போலீசாரின் கண்காணிப்பில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: