திருத்தங்கல்லில் மாநகராட்சி மண்டல அலுவலகம் திறப்பு

சிவகாசி, மே 12: சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகளில் 4 மண்டலம் உள்ளது. இந்த 4 மண்டலத்திற்கும் அலுவலகம் திறக்க வேண்டும் என திமுக உட்பட அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசன் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று 1வது மாநகராட்சி மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது. புதிய அலுவலகத்தை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணைமேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல், சிவகாசி நகர வர்த்தக அணி அமைப்பாளர் இன்பம், மண்டல தலைவர்கள் குருசாமி, சூரியா, கவுன்சிலர்கள் மாணிக்கம், திருப்பதி, சாமுவேல், 7வது வார்டு பொறுப்பாளர் ராஜேஸ் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிவகாசி மாநகராட்சியின் 2வது மண்டலம் திருத்தங்கல் பழைய நகராட்சி அலுவலகத்திலும், 3வது, 4வது மண்டல அலுவலகம் சிவகாசி பழைய நகராட்சி அலுவலகத்திலும் விரைவில் திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: