×

மே 14ல் ரேசன் குறைதீர் முகாம்

சிவகங்கை, மே 12: கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் மே 14அன்று ரேசன் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோருதல், கைப்பேசி எண், பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் கலந்துகொண்டு பன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Ration Kuradir Camp ,
× RELATED (வேலூர்) 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி வேலூர் அருகே சோகம்