×

சிங்கம்புணரி சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

சிங்கம்புணரி, மே 12: சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி கோட்டை வேங்கைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. சமத்துவபுரத்தில் நூறு வீடுகள், ரேஷன் கடை, அங்கன்வாடி, மற்றும் சாலை வசதி குடிநீர் வசதி மின்சார வசதி, குழந்தைகளுக்கு விளையாட்டு திடல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர்,கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் கான்கிரீட் வீடு வழங்க வேண்டும் என்பதற்காக, சமத்துவபுரம் திட்டத்தினை ஏற்படுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அனைத்து தரப்பினரும் ஏற்றத்தாழ்வின்றி முன்மாதிரி கிராமத்தினை உருவாக்கி வருகிறார்கள். இதற்கான பயனாளிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது. சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் அனைத்து உட்கட்டமைப்பு பணிகள் விரைந்து முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஊராட்சித்துறை இயக்குநர் பிரவின்நாயர் தெரிவித்தார்.

தொடர்ந்து கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில் நடுவதற்காக வளர்க்கப்பட்டு வரும் செடிகள் பராமரிக்கப்பட்டு வரும் முறையினையும், ஜெயங்கொண்டான் நிலை ஊராட்சியினை மாதிரி கிராமமாக முன் எடுத்துச் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவரஞ்சனி, சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, வட்டாட்சியர் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெட்சுமணராஜ், பாலசுப்பிரமணியன், கண்ணமங்கல பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செம்மலர், திமுக ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

Tags : Singampunari ,Samathuwapura ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...