பரமக்குடி வட்டாரத்தில் வேளாண் திட்ட சிறப்பு முகாம்

பரமக்குடி, மே 12: பரமக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சிறப்பு முகாம் நென்மேனி, வேந்தோணி, மேலாய்குடி, எஸ்.அண்டகுடி, மோசுகுடி மற்றும் தெளிச்சாத்தநல்லூர் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்றது. வளையனேந்தல் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி பாலசுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்டம் இணைப்பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகர் விவசாயிகள், விவசாய குழுக்கள் மற்றும் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் மானியம் பற்றி கூறினார். மீன் வளர்ப்பு முறைகள் மற்றும் மானியங்கள் வழங்குதல் குறித்து மீன்வள உதவி இயக்குனர் கோபிநாத், வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டம் ஷேக் அப்துல்லா கலந்துகொண்டு வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்  பேசினர்கள்.

முகாமில் பயனாளிகளுக்கு பண்ணை கருவிகள் அடங்கிய தொகுப்பு கிட் மற்றும் தார்பாலின் ஆகியவை மானியத்தில் வழங்கப்பட்டது. இம்முகாமில் பரமக்குடி வட்டார அட்மா திட்ட சேர்மன் சந்திரசேகர், கமுதக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் லாட செல்வம், பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலாய்க்குடி கிராமத்தில் நடந்த சிறப்பு முகாமில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாணிக்கவேல், வேளாண்மை துணை இயக்குநர் கண்ணையா ஆகியோர் கலந்துகொண்டு விவசாய கடன் அட்டை பெறுதல், பட்டா மாற்றுதல், நுண்ணீர் பாசனம் அமைத்தல், பயிர் கடன் பெறுதல் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.

Related Stories: