சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

காங்கயம், மே 12: வெள்ளகோவில்  பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (21). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 17  வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், பின்னர் இருவரும் திண்டுக்கல்  பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.  இந்த நிலையில் தற்போது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  இதையடுத்து காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது சிறுமிக்கு 17 வயது  என்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காங்கயம்  அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: