காங்கயம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

காங்கயம், மே 12: காங்கயம் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடந்தது. காங்கயம் அரசு மருத்துவமனையில் நேற்று தீயணைப்பு நிலையம் சார்பில் செவிலியர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு, மருத்துவமனைகளில் மின் கசிவு மற்றும் வேறு காரணங்களால் தீ விபத்து ஏற்படும்போது தீயணைப்பான் கருவி மூலம் எப்படி தீயை அணைப்பது, நோயாளிகளை காப்பாற்றுவது எப்படி? எனவும், இதுபோன்ற தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தார். இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: