சாலை அமைக்க கோரி அமைச்சரிடம் மனு

உடுமலை, மே 12: தளி பேரூராட்சி துணைத் தலைவர் செல்வன் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் மணிகண்டன், திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்  முருகன், ஆகியோர் அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில், ‘‘ஜல்லிப்பட்டி ஊராட்சி ஈசல் திட்டு வன குடியிருப்புக்கு கொங்குரார்   குட்டையிலிருந்து சாலை அமைக்க வேண்டும், திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலிலிருந்து வரும் வருவாயில் ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் திருமூர்த்திமலை கிராம சபைக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட அமைச்சர், கோரிக்கைகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: