ஊட்டி வாலிபர் மீது குண்டாஸ்

ஊட்டி,  மே 12: திருப்பூர் வீரபாண்டி பகுதியில், மதுசூதனன் என்பவரை கத்தியை காட்டி  மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற  ஊட்டியை சேர்ந்த பிரசாந்த் (22)  என்பவரை வீரபாண்டி போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரசாந்த் மீது நல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி  வழக்கு, ரயில்வே போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு  குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பிரசாந்தின் தொடர் குற்றங்களை  தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு அவரை குண்டர் சட்டத்தின் கீழ்  கைது செய்து உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து கோவை மத்திய சிறையில்  இருக்கும் பிரசாந்திடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை  போலீசார் வழங்கினர்.

Related Stories: