கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களை கவனமாக இயக்க அறிவுறுத்தல்

கோத்தகிரி, மே 12: கோத்தகிரி மலைப்பாதையில் பயணிக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகள், வாகனங்களை கவனமாக இயக்குமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் ஊட்டிக்கு வெளி மாநில, வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் வழியாக வந்து கோத்தகிரி, குஞ்சப்பனை வழியாக சமவெளிப் பகுதிகளுக்கு செல்ல ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் கடந்த இரண்டு வாரங்களில் நான்கு சுற்றுலா வாகனங்கள் விபத்திற்குள்ளான நிலையில், மலைப்பாதையில் பயணிக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதையில் பயணிக்கும் போது போக்குவரத்து நெறிமுறைகளை பின்பற்றிடவும், வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்கவும், மிகக்குறுகிய வளைவுகளில் ஒலி எழுப்பி வாகனத்தை குறிப்பிட்ட வேகத்தில் இயக்கவும் கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணனக்குமார் தலைமையிலான காவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், மலைப்பாதையில் பயணிக்கும் போது ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: