தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் கைது

கோவை, மே 12: கோவையில் தமிழக கவர்னரை கண்டித்தும், ஒன்றிய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட இருந்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தமிழ் புலிகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சபாபதி, மாநில துணை பொதுச்செயலாளர் கோவை மார்க்ஸ், மேற்கு மண்டல நிதி செயலாளர் அப்துல்ல, கிழக்கு மாவட்ட துணை செயலாளர் கோகுல், வடவள்ளி வீரா, அப்துல் அக்பர், பாடியார் தேவராஜூலு, ரங்கநாயகி ஆகியோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories: