3 திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி, மே 12:  மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மூன்று திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியின் கீழ் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட கஸ்பாபேட்டை ஊராட்சியில் அரசு போக்குவரத்து நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கவும், குளூர் ஊராட்சிக்குட்பட்ட குளூர் காலனியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கவும், நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிக்குட்பட்ட டீச்சர்ஸ் காலனியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கவும் நேற்று பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் யுவரேகா தனசேகர் தலைமை தாங்கினார். திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தனர். மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், மொடக்குறிச்சி யூனியன் பொறியாளர் பாண்டியராஜ், அவல்பூந்துறை பேரூர் செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பெரியசாமி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜெயபால், கிருஷ்ணமூர்த்தி, ராஜா என்கிற ஆசைத்தம்பி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுதன், துணை அமைப்பாளர் கவின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: