ஈரோடு  வாசவி கல்லூரியில் சான்றிதழ் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

ஈரோடு, மே 12: ஈரோடு  வாசவி கல்லூரி சுயநிதி பிரிவின் சார்பாக  சிறப்பு சான்றிதழ் பயிற்சி வகுப்பு ஒரு வாரம் நடைபெற்றது. இதன் நிறைவு விழா கல்லூரியில் கொண்டாடப்பட்டது. விழாவை  வாசவி கல்லூரி சுயநிதிப் பிரிவின் செயலாளர் வி.ஆதிகேசவன்  தலைமை தாங்கி  தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் எ.விஜயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

ஈரோடு அனுபம் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர் வி. மோகன்ராஜ்  கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த பயிற்சி வகுப்புகளில் பயனடைந்த 505 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் புலமுதன்மையர் பேராசிரியர் கே.அனந்த பத்மநாபன்  செய்திருந்தார்.

Related Stories: