மாகாளியம்மன் பொங்கல் விழா

ஈரோடு,  மே 12:  ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் சக்தி மாகாளியம்மன், மதுரை வீரன்  கோயில் உள்ளது. நடப்பாண்டுக்கான பொங்கல் விழா கடந்த 3ம் தேதி  பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து  புஸ்பரதத்தில் அலங்கரித்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.  இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, இளநீர் காவடி, பறவை காவடி  எடுத்து வந்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை  செலுத்தினர். தொடர்ந்து கோயில் முன் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு  படைத்து வழிபட்டனர்.

நேற்று மாலை 4 மணிக்கு  அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், பலி பீடம் ஆராதனையும் நடந்தது. இன்று (12ம்  தேதி) மாலை 4 மணிக்கு கருப்பராயன் கோயிலில் இருந்து மதுரை வீரன் சிலை  புஷ்பரதத்தில் அலங்கரித்து ஊர்வலமாக கோயிலுக்கு வருதலும், நாளை(13ம் தேதி)  இரவு 8 மணிக்கு அம்மன் புஷ்ப அலங்காரத்தில் வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக  அழைத்து வருதலும் நடக்கிறது.

Related Stories: