கோட்ட அலுவலகத்தில் ரயில் பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் ரயில்வே ஸ்டேஷனில் பொதுமேலாளர் திடீர் ஆய்வு

சேலம், மே 11:சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா சேலத்திற்கு நேற்று காலை வந்தார். அவர், திடீரென சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு நடத்தினார். 4, 5வது பிளாட்பார்மில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் இருக்கிறதா? என்று பார்வையிட்டார். பயணிகள் ஓய்வு அறை, உணவகம், இதர ஸ்டால்களில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து 5வது பிளார்ட்பார்மில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்து, சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என பார்வையிட்டார்.

பின்னர் ரயில் லோகோ பைலட்டுகளுக்கான பணி ஒதுக்கீட்டையும், அவர்களுக்கான ஓய்வறையையும் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். சிக்னல், டிராக் மாற்றத்திற்கான ஆர்.ஆர். கேபின் அலுவலகத்தையும், ரன்னிங் ரூம் அலுவலகத்தையும், யார்டு பகுதியையும் பார்வையிட்டு ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்த ஆய்வினை நடத்தினார். மேலும், அந்த அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் மின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின்போது துணை பொதுமேலாளர் செந்தமிழ்செல்வன், சேலம் கோட்ட மேலாளர் கொளதம் ஸ்ரீநிவாஸ், கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வை முடித்த பின்னர், சேலம் கோட்ட ரயில்வே அலுவலகத்தில் ரயில் பாதுகாப்பு ஆய்வுக்கூட்டத்தை பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா நடத்தினார். இதில், ரயில்வே இயக்க பிரிவு மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகள், அலுவலர்கள், லோகோ பைலட்டுகள், துணை லோகோ பைலட்டுகள், கார்டுகள் கலந்துகொண்டனர். அவர்களிடம் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது, பராமரிப்பு பணி குறித்து பல்வேறு ஆலோசனைகளை பொதுமேலாளர் வழங்கினார். மேலும், ரயிலை இயக்கிச் செல்லும் போது, விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பான ரயில் இயக்கமே பயணிகளுக்கு முக்கியம் என்பதை எடுத்துரைத்தார். தொடர்ந்து மாலையில், சேலம்-மேட்டூர் அணை ரயில்பாதை மற்றும் ஸ்டேஷன்களையும் ஆய்வு செய்தார்.

Related Stories: