×

ஓராண்டு சாதனை விளக்க தி.மு.க., பொதுக்கூட்டம்

திருச்செங்கோடு, மே 11: திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், திருச்செங்கோடு தேர்நிலை அருகில் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி தலைமை வகித்தார். நகர திமுக செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். பொதுக்கூட்டத்தில் சிலம்ப கலைக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து, சிலம்பாட்ட குழுவினர் சிலம்பம், சுருள் வீச்சு, தீப்பந்தம் போன்ற சாகசங்களை நிகழ்த்தி நன்றி தெரிவித்தனர். திமுக தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றிகொண்டான், திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்பி., கலந்து கொண்டு பேசினார்.

Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...