×

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 1 தமிழ் முதல் தாள் தேர்வை 23,547 பேர் எழுதினர்: 1,174 பேர் ஆப்சென்ட்

விருநகர், மே 11: தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு மே 10 (நேற்று) துவங்கி மே 31 வரை நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர் 4 கல்வி மாவட்டங்களில் பிளஸ் 1 தேர்வை 94 மையங்களில் எழுத 11,947 மாணவர்கள், 12,765 மாணவியர் என மொத்தம் 24,712 பேர் அனுமதி பெற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வில் 690 மாணவர்கள், 484 மாணவியர் என 1,174 பேர் எழுதாமல் ஆப்சென்ட் ஆகி உள்ளனர். தேர்வினை 11,256 மாணவர்கள், 12,281 மாணவியர் என மொத்தம் 23,537 பேர் எழுதினர். தமிழ் தேர்வில் 1,174 பேர் எழுதாமல் ஆப்சென்ட் ஆகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Virudhunagar district ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...