திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா

திருச்செந்தூர், மே 11: திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயில் கொடை விழா, நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 8ம் தேதி இரவு மாக்காப்பு அலங்காரம், நேற்று முன்தினம் இரவு சந்தன லேபன அலங்காரம் நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் இருந்து முத்தாரம்மனுக்கு தீர்த்தம், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 10 மணிக்கு முத்தாரம்மன் கோயிலிலிருந்து உச்சினிமாகாளியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலுக்கு தட்டுபிரசாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சியை தொடர்ந்து வெயிலுகந்தம்மன் கோயிலிலிருந்து தாடாத்தி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தது. பின்னர் படையல் கஞ்சி தீபாராதனையாகி, முத்தாரம்மன் கோயில் சேர்ந்தது. இரவில் அம்மனுக்கு அலங்கார, தீபாராதனையாகி, வெள்ளி அங்கி சாத்தி, சப்பரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 கொடை விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் நேர்த்திக்கடனாக பல்வேறு தெய்வங்கள் உள்ளிட்ட வேடமணிந்து கோயிலுக்கு வந்தனர். விழாவில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாவட்ட தலைவர் பாலன், துணை தலைவர் ராமன், நகராட்சி கவுன்சிலர்கள் முத்துக்குமார், கிருஷ்ணவேணி செண்பகராமன், மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பொன்முருகேசன், 8வது வார்டு திமுக செயலாளர் மோகன், மேலவை பிரதிநிதி சிவா, பாஜ வார்டு தலைவர் மணிகண்டன், ஆத்தூர் சைவ வேளாளர் சங்க செயலாளர் கார்த்திகேயன், பிகேஎன் வாட்டர் சப்ளை சண்முகசுந்தரம், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கார்க்கி, பாபு ஸ்டுடியோ பாபு, கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் செல்வசண்முகசுந்தர், சின்னமகாராஜா பத்திரம் எழுதும் ஆபீஸ் பழனிசெல்வம், ஐடா பத்திரம் எழுதும் அலுவலகம் பத்மநாபன், ஐடா பிளாரன்ஸ், சைவ வேளாளார் சங்க நிர்வாகஸ்தர் ஜெகநாதபெருமாள், நகர எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் வெங்கடாசலம், ஓட்டல் விசாகா பிச்சையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சைவ வேளாளர் ஐக்கிய சங்க தலைவர் ஆனந்தராமச்சந்திரன், துணை தலைவர் சீனிவாசன், செயலாளர் ஞானசுந்தரம், துணை செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் பொன்முருகேசன், கணக்கர் சடகோபன் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் மற்றும் சைவ வேளாளர் இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.

Related Stories: