மூணாறில் கேரள சட்டசபைக் குழு ஆய்வு

மூணாறு, மே 11: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அம்மாநில சட்டப்பேரவைக் குழு தலைவர் பிரதிபா தலைமையில், மூணாறில் நேற்று கூட்டம் நடந்தது. இது குறித்து சட்டப்பேரவைக்குழு தலைவர் பிரதிபா கூறுகையில், ‘2015 முதல் கமிட்டிக்கு வந்த புகார்களில், பொதுத்தன்மை கொண்ட 6 புகார்களை சட்டசபைக் குழு பரிசீலித்தது. இதில், இரண்டு புகார்களுக்கு தீர்வு காணப்பட்டன. மற்ற நான்கு புகார்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். மூணாறில் நிலவும் பட்டா பிரச்னைகள் மற்றும் குடிநீர் தொடர்பான பிரச்னைகள் குறித்தும், குழுவிற்கு அதிக அளவில் புகார்கள் வந்தன. தாமதிக்கப்படும் நீதி, நீதி அல்ல என்பது கமிட்டியின் கருத்து. இதுபோன்ற பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றும் மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்’ என்றார்.

Related Stories: