ஆடியை நினைவுபடுத்திய சூறைக்காற்று

நெல்லை,  மே 11: நெல்லை மாவட்டத்தில் கடந்த 2  மாதங்களாக கோடை வெயில் கொளுத்துகிறது. 10 நாட்களாக தினமும் சராசரியாக 100  டிகிரி அளவில் வெப்பம் பதிவானது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி  நட்சத்திர கத்தரி வெயில் தாக்கம் தொடங்கியதும் வெப்ப பதிவு மேலும் உயர்ந்தது. நேற்று முன்தினம் திடீரென  அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் குறைந்தது. அன்று அதிகபட்சமாக 95 டிகிரி  பாரன்ஹீட் என்ற அளவிலேயே வெப்பம் பதிவானது.

இந்நிலையில் நேற்று தொடர்ச்சியாக 2வது நாளாக வெயில் தாக்கம் குறைந்தது. காலை  முதல் மேகமூட்டமாக இருந்து. பகல் 10 மணிக்கு மேல் காற்றின் வேகம்  அதிகரித்தது. காற்று சில மணி நேரம் நீடித்த நிலையில் சுமார் அரை மணி  நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்று வீசியது. சாலையில்  கிடந்த குப்பைகள் காற்றில் பறந்தன. ஆடிமாத காற்றை நினைவு படுத்தும்  வகையில் காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்தாடின. சாலைகளில் புழுதி பறந்ததால்  நடந்து சென்றவர்களும், வாகன ஓட்டிகளும் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர்.

Related Stories: