நெல்லையில் நாளை மறுதினம் நெல் திருவிழா

நெல்லை,  மே 11: நெல்லை கலெக்டர் விஷ்ணு கூறுகையில் ‘‘நெல்லை மாவட்டம் அதன் பெயருக்கு ஏற்றார் போல்  அதிகமாக நெல் பயிரிடும் மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 80% நெல் மட்டுமே  பயிரிடப்படுகிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி, பாபநாசம், மணிமுத்தாறு,  அணைகளில் நீரைப் பயன்படுத்தி நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதை  கருத்தில்கொண்டு முதன்முறையாக நெல் திருவிழா நாளை மறுதினம் (13ம் தேதி)  காலை 9.30 மணிக்கு பாளை நூற்றாண்டு மண்டபத்தில் தமிழக சபாநாயகர்  அப்பாவு தலைமையில் நடக்கிறது. எம்.பி., எம்எல்ஏக்கள், மேயர், துணை மேயர்,  மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின்  பிரதிநிதிகள், விவசாயிகள் முன்னிலை வகிக்கின்றனர். ஆராய்ச்சி நிலைய  பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இயற்கை விவசாயம் மேற்கொள்ளும்  விவசாயிகள் அனைவரும்  ஒருங்கிணைந்து நடத்தும் இவ்விழாவில் விவசாயிகள் திரளாக பங்கேற்று பயன்பெற வேண்டும்’’ என்றார்.

Related Stories: