திருவிழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திருச்சி வருகை

திருச்சி, மே 11: சிங்கப்பூரில் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் காசி விஸ்வாத சமூகம். இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர். இந்நிலையில் காசி விஸ்வநாத சமூகத்தின் சொந்த ஊரில் உள்ள கோயிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சிக்கு நேற்று காலை காசி விஸ்வநாத சமூகம் வந்தார். பின்னர் திருச்சியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தரிசனம் முடிந்து, மாலை மீண்டும் ஹெலிகாப்டரில் திருச்சி வந்து, சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories: