கொடைக்கானலில் வாலிபரை கட்டி வைத்து அடிக்கும் வீடியோ வைரல்: 4 பேருக்கு வலை

கொடைக்கானல், மே 11: உசிலம்பட்டி வடகாடுபட்டியை சேர்ந்தவர் தனராஜ்  (32). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் கூக்கால் பகுதிக்கு  விவசாய பணிக்கு வந்துள்ளார். இங்கேயே தொடர்ந்து இருந்து வந்த தன்ராஜ் கடந்த  3 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமூகத்தை சேர்ந்த திருமணமான பாலம்மாள் என்பவரை  திருமணம் செய்துள்ளார். பாலம்மாள் குடும்பத்தினருக்கு இத்திருமணத்தில்  விருப்பமில்லை. அப்போது இருந்தே முன்பகை இருந்து வந்தது.

கடந்த மே 7ம் தேதி  தன்ராஜ் வயல் வேலைக்கு சென்றார். அப்போது பாலம்மாள் சகோதரரான பூவேந்திரன்,  உறவினர்கள் மன்னவனூரை சேர்ந்த வரதராஜ், கார்த்திக், சின்னதம்பி ஆகியோர்  தனராஜை வம்பிழுத்து கல்லால் தாக்கியதுடன், கயிற்றால் கட்டி வைத்தும்  அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த தனராஜ் தேனி ஜிஹெச்சில்  சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தன்ராஜ் புகாரில் கொடைக்கானல் போலீசார்  வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர். தன்ராஜ் கட்டி வைத்து  தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது.

Related Stories: