×

குதிரையாறு, பாலாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

சென்னை, மே 11: தமிழக நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பழநி வட்டம், ஆண்டிபட்டி கிராமம், குதிரையாறு அணையில் இருந்து 2ம் போக பாசன பரப்பிற்காக இன்று (மே 11) முதல் 08.09.2022 வரை 120 நாட்கள் பாசன காலத்திற்கு தகுந்த இடைவெளிவிட்டு 103.16 மில்லியன் கன அடிக்கு  மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 400.00 ஏக்கர், திருப்பூர் மாவட்டத்தில் 428.89 ஏக்கர் ஆக மொத்தம் 828.89 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் பழநி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தாடாகுளம் 2ம் போக பாசனத்திற்கு முழு பாசன பரப்பான 844 ஏக்கருக்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு இன்று (மே 11) முதல் 08.09.2022 வரை 155.52 மி.க.அடி நீரை நாள் ஒன்றுக்கு 15 கன அடி வீதம் 120 நாட்களுக்கு திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பழநி வட்டத்தில் உள்ள புதச்சு, பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Kudirayaru ,Palaru dam ,
× RELATED பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 120...