×

அவிநாசியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அவிநாசி, மே.11:   அவிநாசியில் தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்டசெயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (11ம் தேதி) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின்பாபு கலந்து கொண்டு மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்கிறார். இதில், மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மின் வாரிய அவிநாசி கோட்ட செயற் பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags : Avinasi ,Power Consumers Reducer Meeting ,
× RELATED பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்