திருப்பூர் மங்கலம் ரோட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருப்பூர், மே 11: மங்கலம் ரோடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில், தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருப்பூர்  லயன்ஸ் கிளப், கருவம்பாளையம் மனவளக்கலை அறக்கட்டளை, செல்வ விநாயகர் கோவில்  அறக்கட்டளை, தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம் ஆகியவை சார்பில் திருப்பூர்  மங்கலம் ரோடு பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில் நீர் மோர் பந்தல்  அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி கவுன்சிலர் சாந்தாமணி திறந்து  வைத்தார். தம்பி வெங்கடாசலம், லயன்ஸ் கிளப் நிர்வாகி மோகன்குமார்,  மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் அய்யப்பன், செந்தில்குமார் உட்பட பலர்  பங்கேற்றனர்.

Related Stories: