திருப்பூர் கிழக்கு, வடக்கு மாவட்ட தேர்தலையொட்டி வேட்பு மனுக்களை உற்சாகமாக வழங்கிய திமுகவினர்

திருப்பூர், மே 11: திமுகவின்  15-வது பொதுத்தேர்தலையொட்டி திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு  மாவட்டத்திற்கு நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பொறுப்பிற்கான பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பம் நேற்று பெறப்படுவதாக திருப்பூர் கிழக்கு மாவட்ட  பொறுப்பாளரும், செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் மற்றும் வடக்கு  மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.  அதன்படி  திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கயம், வெள்ளக்கோவில்,  தாராபுரம் நகரம், சென்னிமலை, முத்தூர், மூலனூர், கன்னிவாடி,  கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம், ருத்ராவதி பேரூர் மற்றும் வடக்கு  மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், திருமுருகன்பூண்டி நகரம், அவினாசி,  அன்னூர் பகுதிகளுக்கு மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி  அரங்கில் வேட்பு மனுக்களை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் மற்றும்  ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ஏ.என்.ரகு ஆகியோர்  பெற்றுக்கொண்டனர். இதில் உற்சாகமாக திமுகவினர் வேட்பு மனுக்களை வழங்கினர்.

Related Stories: