கந்தர்வகோட்டையில் டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கந்தர்வகோட்டை,மே 11: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் வேளாண்மைத்துறை மற்றும் தீயணைப்பு நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் டெங்கு பரவலை தடுக்கும் வகையில் புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் மணிமாறன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், பூச்சியியல் வல்லுநர் ஏகநாதன், சுகாதார ஆய்வாளர்கள் நல்லமுத்து, முத்துக்குமார், திருநாவுக்கரசு, பழனிசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இயங்கி வரும் வேளாண்மை துறை அலுவலகம் மற்றும் அதன் சுற்று வட்டார வீதிகள் அதனை தொடர்ந்து கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு கொசுவை ஒழிக்கும் வகையில் கொசு மருந்தினை ஊழியர்கள் கொண்டு அடித்தனர். மேலும் தண்ணீர் தேங்காத வகையில் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை பேணிக்காக்க வலியுறுத்தியும் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: