×

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கண்டறிய 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு


பெரம்பலூர், மே 11: பெரம்பலூர்மாவட்டத்தில் குற்ற சம்பவங்களைக் கண்டறிய, குற்றவாளிகளை அடையாளம் காண ஏதுவாக மாவட் டம் முழுக்க 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என எஸ்பி மணி கூறினார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி நேற்று(10ம் தேதி) செ ய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: பெரம்பலூர் நகரில் ஏற் கனவே குற்ற சம்பவங்கள் நடப்பதைக் கண்டறிய பஸ் ஸ்டாண்டுகள், 3 ரோடு, 4 ரோடு, சாலை சந்திப்புகள், முக்கிய வீதிகளில், போலீஸ் ஸ்டேசன்களில் என பல்வேறு இடங்களில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்தும் காவல்கட்டுப்பாட்டு அறையின் மூலம் பயன்பாட்டில் உள்ளது.
இருந்தும் நகரின் விரிவாக்கப்பகுதிகள், மாவட்டத்தின் இதர பல்வேறு முக்கியப்பகுதிகளில் சிசி டிவி கேமரா க்கள் பொருத்தினால் கொள்ளையர் நடமாட்டம், தப்பி ச் செல்லும் வழித்தடங்கள், கொள்ளையரின் அடையா ளங்கள் கண்டறிய ஏதுவாக இருக்கும். இதற்காக கடந்த சிலமாதங்களுக்கு முன்பே சிசி டிவி கேமராக்களை மா வட்ட காவல்துறைக்கு மனமுவந்து வழங்கிடக் கோரி இருந்தோம். அதன்படி தற் போது பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சிசி டிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்துவருகிறது.

ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சியில், பாடாலூர், திருவிளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி திருட்டு சம்பவங் களில் ஈடுபடும் கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிசெய்யும் வகையிலும் ரூ.15 லட்சம் மதிப்பில் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாடாலூர் போலீஸ் ஸ்டேசன், பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 100 சிசிடிவி கேமராக்கள், 2டிவிக்கள் பெரம் பலூர் நகரின் பல்வேறுஇடங்களில் பொருத்தப்பட்டுள் ளன. பெரம்பலூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா ரூ 2.5லட்சம் மதிப்பில் வழங் கிய 15 கேமராக்கள், ஆலத் தூர் தாலுக்கா, நாரணமங் கலம் எம்.ஆர்.எப் டயர் தொ ழிற்சாலை வழங்கிய 25சிசி டிவி கேமராக்கள், பெரம்ப லூர் பாராளுமன்றத் தொகுதி எம்பி பாரி வேந்தர் வழங்கிய ரூ10 லட்சம் மதிப் பிலான சிசி டிவி கேமராக் கள் என பெரம்பலூர் மாவ ட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குற்றங்களைக் கண் டறிய குற்றவாளிகளை அ டையாளம் காண ஏதுவாக சாலைசந்திப்புகளில், கோ வில்களில், அதிகப்படியான விபத்து நடக்கும் பகுதிகளில், மக்கள் அதிகம் நட மாடும்கடைவீதிகளில்,தொ ழிற் கூடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு எஸ்பி மணி கூறினார்.

Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்