×

வேதாரண்யம் பாஜக ஆலோசனை கூட்டம்

வேதாரண்யம்,மே 11: வேதாரண்யம தாலுகா ஆயக்காரன்புலத்தில் வேதாரண்யம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நாளை (12ம் தேதி) திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வேதாரண்யம் தெற்கு ஒன்றியத்திலிருந்து திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி தலைவர் செந்தில் நன்றி கூறினார்.

Tags : BJP ,
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...