பள்ளி, கல்லூரிகளில் சலுகை விலையில் ஆவின் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்: விசிக எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில், ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கும் உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பேசினார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): பால்வளத் துறை அமைச்சர் தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் சலுகை விலையில் ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கும் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பாரா. பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்: உறுப்பினர் கேட்ட கேள்வி குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Stories: