பிளஸ் 1 பொதுத்தேர்வில் 13,902 பேர் எழுதினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 13,902 பேர் எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 5ம் தேதி பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை 13,518 மாணவ, மாணவிகள் எழுதினர். தொடர்ந்து 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இதனை 13,902 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கி இம்மாதம் 30ம் தேதி வரை நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 6881 மாணவர்கள், 7021 மாணவிகள் என மொத்தம் 13,902 பேர் எழுதுகின்றனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுத 50 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க 85 சிறப்பு பறக்கும் படைளை நியமித்து, தேர்வு மையங்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: