கொப்பரை தேங்காய்க்கு விலை நிர்ணயம் வேண்டும் தென்னை விவசாய சங்கம் கோரிக்கை

திருவில்லிபுத்தூர், மே 10: கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை கிலோ ரூ.140 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என தென்னை விவசாய சங்க சிறப்பு பேரவை கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திருவில்லிபுத்தூரில் உள்ள மேலரத வீதியில், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்தையா தலைமை வகித்தார்.

மாநில அமைப்பாளர் விஜயமுருகன், மாநில துணை அமைப்பாளர் முத்துராமு, மாநில குழுவை சேர்ந்த கணேசன் மற்றும் தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140க்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். தென்னை மரங்களில் ஏற்படும் வெள்ளை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.

தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை மீண்டும் கோவைக்கு மாற்ற வேண்டும்.சாத்தூரில் இயங்கும் கொப்பரை கொள்முதல் நிலையத்தை வத்திராயிருப்புக்கு மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அளவில் இருந்து ஏராளமான தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories: