காரியாபட்டியில் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பேரூராட்சி கவுன்சிலர் துவக்கி வைத்தார்

காரியாபட்டி, மே 10: காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் எஸ்விஎஸ் வாட்டர், பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலர் சத்தியபாமா ஆகியோர் இணைந்து பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமலா தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு தினமும் இலவசமாக தண்ணீர் வழங்க மூன்று சின்டெக்ஸ் தொட்டி பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலர் சத்தியபாமா, எஸ்விஎஸ் நிறுவனர் தாமோதரகண்ணன் சார்பில் வழங்கப்பட்டது. எஸ்ஐ அசோக்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி மெர்சி, கவுன்சிலர் சரஸ்வதிபாண்டியன், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயராஜன், உமாவதி சாய்பாபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தினமும் 1200 லிட்டர் அதிகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: