கம்பம், மே 10: கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பாரதி புத்தகாலயம் ஆகியவை சார்பில் புத்தகக் கண்காட்சி விற்பனை திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு சுந்தர் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்ட செயலாளர் தமிழ்மணி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வெங்கட் மற்றும் ஸ்ரீராமன் முன்னிலை வகித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின் வரவேற்றார். தமுஎகச மாநிலக் குழு சுருளிப்பட்டி சிவாஜி வாழ்த்துரை வழங்கினார். புத்தக விற்பனை திருவிழாவை கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கம்பம் வடக்கு நகர திமுக செயலாளர் துரைநெப்போலியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.